/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கூடலுாரில் மூன்று கடைகளில் தீடிரென பரவிய தீ பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சாம்பல் கூடலுாரில் மூன்று கடைகளில் தீடிரென பரவிய தீ பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சாம்பல்
கூடலுாரில் மூன்று கடைகளில் தீடிரென பரவிய தீ பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சாம்பல்
கூடலுாரில் மூன்று கடைகளில் தீடிரென பரவிய தீ பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சாம்பல்
கூடலுாரில் மூன்று கடைகளில் தீடிரென பரவிய தீ பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சாம்பல்
ADDED : ஜூலை 20, 2024 01:11 AM

கூடலுார்;கூடலுார் நகரின் மையப்பகுதியில் உள்ள மூன்று கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின.
கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, பெட்ரோல் பங்க் எதிரே உள்ள, செருப்பு கடையின் மேல்பகுதியில், நேற்று மதியம், 1:00 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களில் தீ அருகே உள்ள, துணிக்கடையிலும் 'மளமள'வென பரவியது. கடைகளில் பணிபுரிந்த ஊழியர்கள் அனைவரும் வெளியேறினர்.
தகவலின் பேரில், கூடலுார் தீயணைப்பு நிலை அலுவலர் மார்ட்டின் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், விரைந்து சென்று தண்ணீரை பாய்ச்சி தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. அதற்கும் மற்றொரு கடையிலும் தீ பரவியது.
தொடர்ந்து, ஊட்டியில் இருந்து தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அலுவலர் அழகர்சாமி தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் வந்து, அனைவரும் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் குவிந்தனர். கூடலுார் டி.எஸ்.பி., (பொ.,) சரவணன் தலைமையில் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாகன ஓட்டுனர்கள் பாதிக்காத வகையில் கடையை ஓட்டிய சாலையில் போக்குவரத்தை நிறுத்தியத்துடன், மாற்று சாலை வழியாக வாகனங்கள் இயக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, நான்கு தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் எடுத்து வந்து, இரண்டரை மணி நேரம் போராடி, மதியம் 3:30 மணிக்கு தீயை கட்டுப்படுத்தினர். தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.
இந்த தீ விபத்தால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமானது. தீ ஏற்படுவதற்கான காரணம் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறுகையில்,' அனைவரும் விரைந்து செயல்பட்டதால், தீ விரைவாக கட்டுப்படுத்தப்பட்டது. போலீசாரின் பாதுகாப்பு பணி உதவியாக இருந்தது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தீயில் எரிந்த பொருட்களின் மதிப்பு தெரியவில்லை. அது குறித்து விசாரணை செய்யப்படும்,' என்றனர்.