/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ காற்றில் விழுந்த வாழை மரங்கள்: கவலையில் விவசாயிகள் காற்றில் விழுந்த வாழை மரங்கள்: கவலையில் விவசாயிகள்
காற்றில் விழுந்த வாழை மரங்கள்: கவலையில் விவசாயிகள்
காற்றில் விழுந்த வாழை மரங்கள்: கவலையில் விவசாயிகள்
காற்றில் விழுந்த வாழை மரங்கள்: கவலையில் விவசாயிகள்
ADDED : ஜூலை 20, 2024 01:11 AM

கூடலுார்;முதுமலை, முதுகுழி பகுதியில், 1,400 வாழை மரங்கள் காற்றில் விழுந்ததால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கூடலுார், முதுமலை பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. முதுமலை போஸ்பாரா அருகே முதுகுளி பகுதியில் நேற்று முன்தினம் இரவு மழையுடன் பலத்த காற்றும் வீசியது. அதில், அப்பகுதி சேர்ந்த சுரேஷ், சுசிலா ஆகியோர் பயிட்டிருந்த, 1,400 நேந்திரன் வாழை மரங்கள் விழுந்தன. அறுவடைக்கு இரு வாரங்கள் உள்ள நிலையில், வாழை மரங்கள் விழுந்ததால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய முடியாமல் கவலை அடைந்துள்ளனர்.
ஸ்ரீமதுரை வி.ஏ.ஒ., நாசர் பாதிக்கப்பட்ட வாழை மரங்களை ஆய்வு செய்து, உரிய நஷ்ட ஈடு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக, உறுதி அளித்தார்.
விவசாயி சுரேஷ் கூறுகையில், ''இப்பகுதியில், காட்டு யானைகளிடமிருந்து நேந்திரன் வாழை மரங்களை பாதுகாத்து விவசாயம் செய்து வருகிறோம். அறுவடைக்கு இரண்டு வாரங்கள் உள்ள நிலையில், இவைகள் காற்றில் விழுந்ததால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய முடியாத நிலையில் உள்ளோம். விவசாயத்திற்கு பெற்ற கடனையும் திருப்பி செலுத்த முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும்,' என்றனர்.