/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சாலையோர ஆபத்தான மரங்கள் அகற்றுவது அவசர அவசியம் சாலையோர ஆபத்தான மரங்கள் அகற்றுவது அவசர அவசியம்
சாலையோர ஆபத்தான மரங்கள் அகற்றுவது அவசர அவசியம்
சாலையோர ஆபத்தான மரங்கள் அகற்றுவது அவசர அவசியம்
சாலையோர ஆபத்தான மரங்கள் அகற்றுவது அவசர அவசியம்
ADDED : ஜூலை 20, 2024 01:10 AM

கோத்தகிரி;கோத்தகிரி- ஊட்டி இடையே, சாலையோரத்தில் விழும் நிலையில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்றுவது அவசியம்.
கோத்தகிரி- ஊட்டி சாலையில் வளைவுகள் நிறைந்துள்ளது. அரசு பஸ்கள் உட்பட, தனியார் வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. சாலையோரங்களில் போதிய வேர் பிடிப்பு இல்லாமல் விழும் நிலையில், ஆபத்தான பெரிய மரங்கள் உள்ளன.
தற்போது, கனமழை பெய்து வரும் நிலையில், நிலம் ஈரம் கண்டுள்ளது. கன மழையுடன் லேசான காற்று வீசினால் கூட, வேர்பிடிப்பு இல்லாத மரங்கள் விழும் பட்சத்தில், ஆபத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கடந்த, ஐந்து நாட்களுக்கு முன்பு, கட்டபெட்டு அருகே, கார்ஸ்வுட் பகுதியில், சீகை மரம் சாலையில் விழுந்தது. அகற்றிய பின், இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் வாகன போக்குவரத்து இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
எனவே, வனத்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையினர், ஆபத்தான மரங்களை கணக்கெடுத்து அகற்ற நடவடிக்கை எடுப்பது அவசியம்.