/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ 'ரேடியோ காலர்' பொருத்திய வரையாடு உயிரிழப்பு 'ரேடியோ காலர்' பொருத்திய வரையாடு உயிரிழப்பு
'ரேடியோ காலர்' பொருத்திய வரையாடு உயிரிழப்பு
'ரேடியோ காலர்' பொருத்திய வரையாடு உயிரிழப்பு
'ரேடியோ காலர்' பொருத்திய வரையாடு உயிரிழப்பு
ADDED : ஜூலை 20, 2024 01:06 AM
கூடனார்:முக்கூர்த்தி தேசிய பூங்காவில், 'ரேடியோ காலர்' பொருத்தி கண்காணித்து வந்த, நீலகிரி வரையாடு மாமிச உண்ணி தாக்கி உயிரிழந்தது.
தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரையாடு, தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட முக்கூர்த்தி தேசிய பூங்கா, ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் உள்ளது.
இதனை அழிவிலில் இருந்து பாதுகாக்க மாநில அரசு, 2022 முதல் நீலகிரி வரையாடுகள் பாதுகாப்பு திட்டத்தை, 25.14 கோடி ரூபாயில் செயல்படுத்தி உள்ளது.
திட்டத்தின் மூலம், 'வரையாடுகள் குறித்து ஆய்வு செய்தல், 'ரேடியோ காலர்' மூலம் கண்காணித்தல், அச்சுறுத்தலை போக்குதல், நோய் கண்டறிதல், அவைகள் வாழ்விடமான புல்வெளிகளை மீட்டெடுத்தல், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது,' உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த உள்ளனர்.
மேலும், முக்கூர்த்தி தேசிய பூங்காவில், உலகலாவிய வனவிலங்குகளுக்கான நிதியம் தனியார் அமைப்பு மூலம், மே மாதம் ஆண் வரையாடு ஒன்றுக்கு, ரேடியோ காலர் பொருத்தி, கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், 17ம் தேதி, புவியியல் குறியீடு இணையதளம் வழியாக கண்காணிக்க போது, வரையாடு நடமாட்டம் இல்லாமல் இருந்தது தெரியவந்தது.
வனச்சரகர் யுவராஜ்குமார் தலைமையில் வன ஊழியர்கள், கடைசியாக 'ரேடியோ காலர்' சிக்னல் கிடைத்த இடத்தை நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது சோலை வனப்பகுதியில் நீரோடை அருகே 'ரேடியோ காலர்' பொருத்தப்பட்ட, வரையாடு இறந்து கிடந்தது தெரியவந்தது.
தொடர்ந்து முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் உடலைப் பிரேத பரிசோதனை செய்தார். பிரேத பரிசோதனையில், 'மாமிசம் உண்ணி தாக்கி, வரையாடு இறந்தது தெரியவந்தது,' என, வனத்துறையினர் தெரிவித்தனர்.