/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மக்களுடன் முதல்வர் திட்டம் மனுக்களுடன் வந்த மக்கள் மக்களுடன் முதல்வர் திட்டம் மனுக்களுடன் வந்த மக்கள்
மக்களுடன் முதல்வர் திட்டம் மனுக்களுடன் வந்த மக்கள்
மக்களுடன் முதல்வர் திட்டம் மனுக்களுடன் வந்த மக்கள்
மக்களுடன் முதல்வர் திட்டம் மனுக்களுடன் வந்த மக்கள்
ADDED : ஜூலை 20, 2024 01:06 AM
பந்தலுார்;பந்தலுார் அருகே குந்தலாடி தனியார் மண்டபத்தில், நெலக்கோட்டை ஊராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் முகம் நடந்தது.
வருவாய் ஆய்வாளர் வாசுதேவன் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் டெர்மிளா பன்னீர்செல்வம் தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார். தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், தங்கள் குறைகள் குறித்த மனுக்களுடன் முகாமில் பங்கேற்று துறை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கினர். அதில், யானைகள் கிராமத்திற்குள் வந்து அச்சுறுத்துவதை தடுக்க வேண்டும்.
'சாலை மற்றும் நடைபாதைகள், மின்சார வசதி, பசுத்தேயிலைக்கு உரிய விலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை குறித்து மனுக்கள் வழங்கப்பட்டது.
முகாமில், கவுன்சிலர்கள் ஜோஸ் குட்டி, குணசீலன், வனச்சரகர் ரவி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.