ADDED : ஜூலை 20, 2024 01:07 AM
குன்னுார்:அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளியில் கவிதை போட்டி நடந்தது.
அருவங்காடு வெட்டி மருந்து தொழிற்சாலை மேல்நிலை பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள் கடைபிடிக்கப்பட்டது.
பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கிடையே கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.பள்ளி முதல்வர் சுதா தலைமை வகித்தார். 'எங்கள் காமராஜர்' என்ற தலைப்பில் மாணவர்கள் தங்களின் கவிதை படைப்புகளை வாசித்தனர்.
போட்டி நடுவர்களாக ஆசிரியர்கள் தென்னரசு, புனிதா, வித்யாஷினி ஆகியோர் பங்கேற்றனர். தமிழாசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர் மோகன் செய்திருந்தார்.