/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ காட்டு யானைக்கு 'பர்கர்' ரிசார்ட் ஊழியர்கள் கைது காட்டு யானைக்கு 'பர்கர்' ரிசார்ட் ஊழியர்கள் கைது
காட்டு யானைக்கு 'பர்கர்' ரிசார்ட் ஊழியர்கள் கைது
காட்டு யானைக்கு 'பர்கர்' ரிசார்ட் ஊழியர்கள் கைது
காட்டு யானைக்கு 'பர்கர்' ரிசார்ட் ஊழியர்கள் கைது
ADDED : ஜூன் 06, 2024 10:57 PM

கூடலுார்:நீலகிரி மாவட்டம் முதுமலை, மசினகுடி ஆச்சக்கரை பகுதியில், 'அவடேல்' என்ற தனியார் ரிசார்ட் செயல்படுகிறது. ரிசார்ட் ஊழியர்கள், அங்கு தங்கும் சுற்றுலா பயணியரை கவர, இரவில் அப்பகுதிக்கு வரும் காட்டு யானைகளுக்கு இட்லி, தோசை, பர்கர் உள்ளிட்ட உணவுகளை கொடுப்பதாக புகார் எழுந்தது.
இது குறித்து, மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார் உத்தரவுப்படி, வனச்சரகர் ஜான் பீட்டர் மற்றும் வன ஊழியர்கள், நேற்று முன்தினம் மாலை ரிசார்டில் திடீர் சோதனை செய்தனர். அதில், காட்டு யானைக்கு இட்லி, தோசை, பர்கர் உள்ளிட்ட உணவுகள் கொடுப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, ரிசார்ட் ஊழியர்கள் அனிருத் அவஸ்தி, 26, திரவ்குமார்ராங், 33, அஜ்மாவுல்லா, 25, டேவிட்ரியாங், 21, ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
'காட்டு விலங்குகளுக்கு உணவு அளிக்காதீர்' என ஆங்காங்கே, வனத்துறை சார்பில் போர்டுகள் வைத்துள்ள நிலையிலும், அதைப் பற்றி கவலைப்படாமல், தொடர்ந்து இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபட்ட ரிசார்ட் ஊழியர்கள் மீதான நடவடிக்கை பல தரப்பிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.