Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உறுதி

மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உறுதி

மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உறுதி

மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உறுதி

ADDED : ஜூன் 06, 2024 11:15 PM


Google News
மேட்டுப்பாளையம்;மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

சிறுமுகை பாரதி நகரை சேர்ந்த கீதா செல்வராஜ் என்பவர், கடந்த 10 ஆண்டுகளாக சிறுமுகை நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வருகிறார். கடந்த வாரம் சிறுமுகையில் சத்தியமங்கலம் சாலையில், மரக்கன்றுகளை நட்டுள்ளார். அதற்கு கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து கீதா செல்வராஜ் கூறியதாவது: சத்தி சாலையில் காலியாக உள்ள இடங்களில், கடந்த வாரம் மரக்கன்றுகளை நட்ட போது, சிலர் இந்த சாலையில் விரிவாக்கம் நடைபெற உள்ளது, எனக் கூறி தடை செய்தனர். சிலர் கடைகள் முன்பு நட வேண்டாம் என்று கூறினர்.

இருந்த போதும் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல், ஓரமாக மரக்கன்றுகளை நடவு செய்தேன். தண்ணீர் ஊற்ற சென்று பார்த்தபோது, சில இடங்களில் நடவு செய்திருந்த மரக்கன்றுகள் பிடுங்கப்பட்டிருந்தன. சிலர் மட்டுமே மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுகின்றனர். அதனால் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவு செய்த மரக்கன்றுகளை, பாதுகாக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது: சாலையில் நன்கு வளர்ந்துள்ள மரங்களில், மின்சார லைனிற்கு இடையே இடையூறாக உள்ள, கிளைகள் மட்டுமே, வெட்டுவதற்கு நாங்கள் அனுமதி வழங்கி உள்ளோம். வேறு எந்த வகையிலும் மரங்களை வெட்ட, யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. மேலும் சிறுமுகை சக்தி சாலையை நான்கு வழி சாலையாக, தற்போது மாற்றுவதற்கான சூழ்நிலை இல்லை.

அதனால் எதிர்காலத்தில் போக்குவரத்திற்கும், மின்சார லைனுக்கும் இடையூறு இல்லாத வகையில், மரக்கன்றுகளை நடவு செய்வதை வரவேற்கிறோம். தனிநபர், மகளிர் குழுவினர், எங்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு நடவு செய்தால், அந்த மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us