/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வெள்ளம் சூழ்ந்த கேத்தி மலை காய்கறி பாதிப்பு வெள்ளம் சூழ்ந்த கேத்தி மலை காய்கறி பாதிப்பு
வெள்ளம் சூழ்ந்த கேத்தி மலை காய்கறி பாதிப்பு
வெள்ளம் சூழ்ந்த கேத்தி மலை காய்கறி பாதிப்பு
வெள்ளம் சூழ்ந்த கேத்தி மலை காய்கறி பாதிப்பு
ADDED : ஜூன் 06, 2024 07:05 PM

குன்னுார்:குன்னுார் கேத்தி பாலாடா பகுதியில் தொடரும் கன மழையின் காரணமாக தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கி வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், ஊட்டி, குன்னுாரில் நேற்று மதியம் கன மழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஊட்டி படகு இல்லம் சாலையில் நீர்தேக்கம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊட்டி சாலை எல்லநள்ளி அருகே லேசான மண் சரிவு ஏற்பட்டத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் ஒரு பகுதி சேதமானது.
கேத்தி பாலாடாபகுதி சாலையில் உள்ள பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் விளை நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்து அங்கு பயிரிட்டு இருந்த கேரட் உட்பட மழை காய்கறிகள் சேதமானது. நேற்று காலை முதல், மாலை, 4:00 மணி நேர நிலவப்படி, ஊட்டி, 35 மி.மீ.,- குன்னுாரில் 10 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.
இப்பகுதி விவசாயிகள் கூறுகையில்,''நீலகிரியில் கடந்து போகத்தில் பயிரிடப்பட்ட மலை காய்கறிகள் தற்போதைய மழையால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதில், 10 ஏக்கரில் கேரட் உள்ளிட்ட மழை காய்கறிகள் விவசாயம் பாதித்துள்ளது. தோட்டக்கலை துறையினர் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்,'' என்றனர்.