/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கோடை விழாவில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பரிசு கோடை விழாவில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பரிசு
கோடை விழாவில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பரிசு
கோடை விழாவில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பரிசு
கோடை விழாவில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பரிசு
ADDED : ஜூன் 05, 2024 12:52 AM
ஊட்டி;ஊட்டியில் கோடை விழாவில் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு, பரிசு வழங்கப்பட்டது.
ஊட்டியில், கோடை விழாவின் முதல் நிகழ்வாக, அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி நடந்து முடிந்தது. தொடர்ந்து, குன்னுார் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சியும், இறுதி நிகழ்வாக சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டியும் நடந்தது. தவிர கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
கோடை விழா நாட்களில், தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் உட்பட, பல்வேறு அரசு துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றினர். அவர்களை கவுரவிக்கும் வகையில், ஊட்டி படகு இல்லத்தில் நினைவு பரிசு மற்றும் கேடயங்கள் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.