/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஊட்டி 'சர்க்யூட்' பஸ்களில் 1.06 லட்சம் பேர் பயணம் ஊட்டி 'சர்க்யூட்' பஸ்களில் 1.06 லட்சம் பேர் பயணம்
ஊட்டி 'சர்க்யூட்' பஸ்களில் 1.06 லட்சம் பேர் பயணம்
ஊட்டி 'சர்க்யூட்' பஸ்களில் 1.06 லட்சம் பேர் பயணம்
ஊட்டி 'சர்க்யூட்' பஸ்களில் 1.06 லட்சம் பேர் பயணம்
ADDED : ஜூன் 05, 2024 12:55 AM
ஊட்டி;ஊட்டியில் கோடை சீசனில் இயக்கப்பட்ட, 'சர்க்யூட்' பஸ்களில், 1.06 லட்சம் சுற்றுலா பயணிகள் பயணித்துள்ளனர்.
சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக, கோடை விழா நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகள் எவ்வித இடையூறும் இல்லாமல், சுற்றுலா மையங்களை கண்டுகளிக்க ஏதுவாக, அரசு போக்குவரத்து கழகம், 'சர்க்யூட்' பஸ்களை இயக்கி வருகிறது. நடப்பாண்டு, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், கூடுதல் சர்க்யூட் பஸ்கள் இயக்கப்பட்டன.
பெரியவர்களுக்கு, 100 ரூபாய்; சிறுவர்களுக்கு, 50 ரூபாய் கட்டணத்தில் நிர்ணயிக்கப்பட்டது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் இருந்து புறப்படும் 'சர்க்யூட்' பஸ்கள், ரோஜா பூங்கா, படகு இல்லம் மற்றும் தொட்டபெட்டா சிகரம் வரை இயக்ப்பட்டதால், சுற்றுலா பயணிகள் சிரமம் இல்லாமல், மையங்களை கண்டுக்களித்தனர்.
இதுவரை, 1.06 லட்சம் சுற்றுலா பயணிகள் அதில் பயணித்து பயனடைந்துள்ளனர். இதன்மூலம், ஒரு கோடி ரூபாய் வரை, அரசு போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் கிடைத்துள்ளது.