/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சாலையில் நின்ற மூதாட்டி மீது மரம் விழுந்து பலி சாலையில் நின்ற மூதாட்டி மீது மரம் விழுந்து பலி
சாலையில் நின்ற மூதாட்டி மீது மரம் விழுந்து பலி
சாலையில் நின்ற மூதாட்டி மீது மரம் விழுந்து பலி
சாலையில் நின்ற மூதாட்டி மீது மரம் விழுந்து பலி
ADDED : ஜூன் 05, 2024 12:52 AM
பந்தலுார்:பந்தலுார் அருகே மரம் விழுந்ததில் மூதாட்டி பலியானார்.
பந்தலுார் அருகே சேரங்கோடு இரும்பு பாலம் பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி,69. நேற்று மதியம் வீட்டை ஒட்டிய, கேரளா மாநிலம் வயநாடு செல்லும் சாலையின் ஓரத்தில் நின்றுள்ளார்.
அப்போது, சாலையின் கீழ் பகுதியில் காய்ந்த நிலையில் இருந்த மரம் ஒன்று, அடியோடு சேர்ந்து பாப்பாத்தி மீது விழுந்தது. தலையில் பலத்த அடிபட்ட நிலையில், பந்தலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர், உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த பாப்பாத்தியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்து தொடர்பாக போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.