/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பலா பழங்களை ருசிக்க வரும் காட்டு யானைகள் கூட்டம் கோத்தகிரி சாலையில் எச்சரிக்கையுடன் சென்றுவர அறிவுரை பலா பழங்களை ருசிக்க வரும் காட்டு யானைகள் கூட்டம் கோத்தகிரி சாலையில் எச்சரிக்கையுடன் சென்றுவர அறிவுரை
பலா பழங்களை ருசிக்க வரும் காட்டு யானைகள் கூட்டம் கோத்தகிரி சாலையில் எச்சரிக்கையுடன் சென்றுவர அறிவுரை
பலா பழங்களை ருசிக்க வரும் காட்டு யானைகள் கூட்டம் கோத்தகிரி சாலையில் எச்சரிக்கையுடன் சென்றுவர அறிவுரை
பலா பழங்களை ருசிக்க வரும் காட்டு யானைகள் கூட்டம் கோத்தகிரி சாலையில் எச்சரிக்கையுடன் சென்றுவர அறிவுரை
ADDED : ஜூலை 05, 2024 01:39 AM

கோத்தகிரி;நீலகிரி மாவட்டம், கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில், மாமரம், குஞ்சப்பனை, தட்டப்பள்ளம், முள்ளூர் செம்மனாரை மற்றும் கரிக்கையூர் பகுதிகளில், தேயிலை மற்றும் காபி தோட்டங்களுக்கு நடுவே, ஊடுபயிராக பலா மரங்கள் வளர்க்கபடுகின்றன.
சுவை மிகுந்த இந்த பலாப்பழங்களை சுற்றுலா பயணிகள் முதற்கொண்டு, உள்ளூர் மக்களும் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். தவிர, குத்தகை அடிப்படையில் பலாப்பழங்களை வாங்கி, சாலையோர கடைகளில் உள்ளூர் வியாபாரிகள் பலா சுளைகளை கவர்களில் வைத்து, சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது, பலா சீசன் துவங்கியுள்ள நிலையில், பழங்களை சுவைக்க கூட்டமாக யானைகள் சாலையில் உலா வருவது தொடருகிறது. இதனால், அரசு பஸ் உட்பட, இதர வாகன ஓட்டுனர்கள் அச்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக, இரவில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
வனத்துறையினர் கூறுகையில், 'மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. தற்போது, பலா சீசன் துவங்கி உள்ளது. மரத்தில் உள்ள பழங்களை உண்ணுவதற்கு, யானைகள் கூட்டமாக வருவதால், மக்கள்; ஓட்டுனர்கள் எச்சரிக்கையுடன் சென்று வரவேண்டும். யானை அருகில் சென்று 'செல்பி' எடுப்பது, ஹார்ன் அடித்து, முகப்பு விளக்கை எரிய வைப்பதை தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக, இரவில் வரும் வாகனங்களை முன்னெச்சரிக்கையுடன் டிரைவர்கள் இயக்க வேண்டும்,' என்றனர்.