/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ இருவருக்கு அரிவாள் வெட்டு :மர்ம கும்பல் குறித்து விசாரணை இருவருக்கு அரிவாள் வெட்டு :மர்ம கும்பல் குறித்து விசாரணை
இருவருக்கு அரிவாள் வெட்டு :மர்ம கும்பல் குறித்து விசாரணை
இருவருக்கு அரிவாள் வெட்டு :மர்ம கும்பல் குறித்து விசாரணை
இருவருக்கு அரிவாள் வெட்டு :மர்ம கும்பல் குறித்து விசாரணை
ADDED : ஜூலை 05, 2024 01:38 AM
பாலக்காடு:பாலக்காடு அருகே, மர்ம கும்பல் ஒன்று, நண்பர்களை அரிவாளால் வெட்டியது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கடம்பழிபுரம் குளக்காட்டுகுறுச்சியை சேர்ந்தவர் டோணி, 38. இவரது நண்பர் பிரசாத், 35. நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு குளக்காட்டுகுறுச்சியின் அருகே குடியிருக்கும் டோணியின் உறவினரான ஸ்டெனோ, வீட்டில் மர்ம நபர்கள் சிலர் கதவை தட்டுவதாகவும் வேகமாக வர சொல்லி, டோணியை போனில் அழைத்துள்ளார்.
இதையடுத்து, நண்பன் பிரசாத் உடன் டோணி சென்றபோது, அந்த கும்பல் அங்கிருந்து சென்று விட்டது. அதன்பின், அவர்கள் இருவரும் வீட்டிற்கு ஸ்கூட்டரில் வரும் வழியில் கடம்பழிப்புரம் வேங்கச்சேரி சாலையில், மர்ம கும்பல் அவர்களை தடுத்து நிறுத்தி அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் கை மற்றும் கால்களில் படுகாயமடைந்த டோணி திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், சிறு காயங்களுடன் தப்பிய பிரசாத் பாலக்காடு அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுகின்றனர்.
இதுபற்றி, ஸ்ரீகிருஷ்ணபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஸ்டெனோ வீட்டிற்கு வந்தவர்கள் குறித்தும், இருவரையும் அரிவாளால் வெட்டிய கும்பல் குறித்தும் விசாரிக்கின்றனர்.