/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மலை பாதையில் விரிவாக்க பணி யானை வழித்தடத்தில் வனத்துறை ஆய்வு மலை பாதையில் விரிவாக்க பணி யானை வழித்தடத்தில் வனத்துறை ஆய்வு
மலை பாதையில் விரிவாக்க பணி யானை வழித்தடத்தில் வனத்துறை ஆய்வு
மலை பாதையில் விரிவாக்க பணி யானை வழித்தடத்தில் வனத்துறை ஆய்வு
மலை பாதையில் விரிவாக்க பணி யானை வழித்தடத்தில் வனத்துறை ஆய்வு
ADDED : ஜூலை 05, 2024 01:41 AM

குன்னுார்:குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் விரிவாக்க பணிகளின் போது நந்தகோபால் பாலம் அருகே யானைகள் வழித்தடத்தில், தடுப்பு சுவர் அமைத்ததால் குட்டிகளுடன் யானைகள் கடக்க சிரமப்பட்டன. இதனால், மதுரை ஐகோர்ட் தாமாக முன்வந்து கடந்த, 2022ல் விசாரணைக்கு எடுத்தது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார், பாரதிதாசன் தலைமையிலான நீதிபதிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு யானைகள் கடந்து செல்லும் பாதையில், எழுப்பிய தடுப்பு சுவர் குறித்து கேள்வி எழுப்பினர்.
'பட்டா நிலம் மற்றும் அரசின் எந்த துறைகளாக இருந்தாலும் யானை வழித்தடத்தில் பணிகள் மேற்கொள்ள கூடாது,'என, அதிகாரிகளுக்கும், வனத்துறையினருக்கும் உத்தரவிட்டனர். இதன்படி, 9 இடங்களில் 18 வேகத்தடைகள் அமைக்கப்பட்டன.
தற்போது, குரும்பாடி, பர்லியார் உள்ளிட்ட பகுதிகளில் விரிவாக்க பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
அதில், யானை செல்லும் பாதைகள் குறித்து, நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம் தலைமையில், வனச்சரகர் ரவீந்திரநாத், பாரஸ்டர் ராஜ்குமார் ஆய்வு மேற்கொண்டனர். 'யானைகள் கடக்கும் பகுதிகளை தடுத்து பணிகள் மேற்கொள்ள கூடாது,' என, உத்தவிட்டனர்.
தேசிய நெடுஞ்சாலை துறை செயற் பொறியாளர் ராஜா தலைமையில் நெடுஞ்சாலை துறையினரிடம் யானை கடந்து செல்லும் பகுதிகளை காண்பித்து, 'பணிகள் மேற்கொள்ள கூடாது,' என, உத்தரவிட்டனர்.