/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மாட்டு கொட்டகைக்கு மனு கொடுத்து பார்வையற்ற மாற்றுத்திறனாளி காத்திருப்பு மாட்டு கொட்டகைக்கு மனு கொடுத்து பார்வையற்ற மாற்றுத்திறனாளி காத்திருப்பு
மாட்டு கொட்டகைக்கு மனு கொடுத்து பார்வையற்ற மாற்றுத்திறனாளி காத்திருப்பு
மாட்டு கொட்டகைக்கு மனு கொடுத்து பார்வையற்ற மாற்றுத்திறனாளி காத்திருப்பு
மாட்டு கொட்டகைக்கு மனு கொடுத்து பார்வையற்ற மாற்றுத்திறனாளி காத்திருப்பு
ADDED : ஜூலை 05, 2024 01:48 AM

பந்தலுார்:பந்தலுார் அருகே மாட்டு கொட்டகை வேண்டி ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கால்நடைகள் வளர்ப்போர், பயன்பெறும் வகையில் ஊராட்சி மூலம் மாடு மற்றும் ஆட்டு கொட்டகை அமைத்து தரப்படுகிறது. இதற்கான பலர் விண்ணப்பம் கொடுத்தும் பணிகள் தாமதமாகி வருகின்றன.
இந்நிலையில், பந்தலுார் அருகே மழவன் சேரம்பாடி பகுதியை சேர்ந்தவர் ராகவன்,65. இவருக்கு பார்வை இல்லாத நிலையில், மூளை வளர்ச்சி குன்றிய ரமேஷ் என்ற மகனும், சுசிலா என்ற மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.
'மூளை வளர்ச்சி குன்றிய மகன் மற்றும் பார்வை இழந்த கணவர்,' என, இருவரை, 24 மணி நேரமும், கண்காணிப்பில் வைக்க வேண்டிய நிலையில், சுசிலா வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலையால், மாடுகளை வளர்த்து வருகிறார்.
பார்வை இல்லாவிட்டாலும் மாடுகளை வளர்த்து, பால் கொடுத்து சொசைட்டியில் கொண்டு போய் கொடுக்கும் பணியில் ராகவன் தட்டு தடுமாறி சென்று பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த பகுதியில் சிறுத்தை, யானை மற்றும் செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் வந்து செல்லும் நிலையில், போதிய பாதுகாப்பு வசதி இல்லாத மாட்டு கொட்டகையில் மாடுகளை வளர்த்து வருகின்றனர்.
இப்பகுதியில், 'பாதுகாப்பான முறையில் மாட்டு கொட்டகை அமைத்து தர வேண்டும்,' என,சேரங்கோடு ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்துள்ளார். ஆனால், அவரது மனு புறக்கணிக்கப்பட்டு, இதுவரை மாட்டு கொட்டகை அமைத்து தர ஊராட்சி நிர்வாகம் முன் வரவில்லை.
இது குறித்து ராகவன் கூறுகையில்,'' பார்வையில்லாத எனக்கு இதுவரை யாரும் உதவி செய்யவில்லை. எனவே, மாவட்ட கலெக்டர் எனது நிலையை நேரில் ஆய்வு செய்து உதவி செய்ய வேண்டும்,'' என்றார்.
மாற்றுத்திறனாளி சங்க மாவட்ட தலைவர் அசோக்குமார் கூறுகையில்,'' அதிகாரிகள் பார்வையில்லாத மாற்றத்தினாளிகளுக்கு முன்னுரிமை கொடுத்து உதவிட முன் வர வேண்டும்,'' என்றார்.