/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நீலகிரியை பாதுகாக்க 'பிளாஸ்டிக்' தவிர்ப்பு அவசியம் நெகிழி பை ஒழிப்பு தின நிகழ்ச்சியில் அறிவுரை நீலகிரியை பாதுகாக்க 'பிளாஸ்டிக்' தவிர்ப்பு அவசியம் நெகிழி பை ஒழிப்பு தின நிகழ்ச்சியில் அறிவுரை
நீலகிரியை பாதுகாக்க 'பிளாஸ்டிக்' தவிர்ப்பு அவசியம் நெகிழி பை ஒழிப்பு தின நிகழ்ச்சியில் அறிவுரை
நீலகிரியை பாதுகாக்க 'பிளாஸ்டிக்' தவிர்ப்பு அவசியம் நெகிழி பை ஒழிப்பு தின நிகழ்ச்சியில் அறிவுரை
நீலகிரியை பாதுகாக்க 'பிளாஸ்டிக்' தவிர்ப்பு அவசியம் நெகிழி பை ஒழிப்பு தின நிகழ்ச்சியில் அறிவுரை
ADDED : ஜூலை 05, 2024 01:50 AM

ஊட்டி:'நீலகிரி உயிர் சூழல் மண்டலத்தை பாதுகாக்க, 'பிளாஸ்ட்டிக்' ெபாருட்களை தவிர்ப்பது அவசியம்,' என, ெதரிவிக்கப்பட்டது.
ஊட்டி சி.எஸ்.ஐ., ேஹாபார்ட் நடுநிலைப் பள்ளியில், குறித்து தேசிய பசுமைபடை சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் விமலா அன்பு செல்வி தலைமை வகித்து பேசுகையில், ''நாம் உபயோகிக்கும் பொம்மைகள், அழகு சாதனங்கள், பிற வீட்டு உபயோக பொருட்கள் பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும். வீட்டில் உருவாக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக சேகரித்து மறு சுழற்சிக்கு உட்படுத்த நகராட்சி துாய்மை பணியாளரிடம் வழங்குவது அவசியம். பிளாஸ்டிக் மூலம், மண் மற்றும் நீர் ஆதாரங்கள் பாதிக்கப்படுவதற்கு, பொதுமக்களின் பொறுப்பற்ற செயல்தான் காரணம். மாணவர்கள் இந்த கருத்தினை வீட்டிலும், பொதுமக்களிடம் எடுத்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.
தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் கூறுகையில், ''மூலிகை தோட்டம் அமைக்க மாணவர்கள் முன்வருவது அவசியம். உலகளாவிய அளவில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுத் திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
பாரம்பரியமாக, துணிப்பைகள், மூங்கில் கூடைகள், கோரை புற்களால் உருவாக்கப்பட்ட துடப்பங்கள், இயற்கைக்கு பாதகம் இல்லாத வீட்டு உபயோக பொருட்களை நாம் உபயோகித்து வந்துள்ளோம்.
தற்போது, 'எல்லாம் பிளாஸ்டிக்;எதிலும் பிளாஸ்டிக்' என்கின்ற மன நிலைக்கு மக்கள் மாறிவிட்டனர். பல்வேறு நிலைகளில் பாதகம் ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, நீலகிரி உயிர்ச் சுழல் பாதுகாப்பிற்கு சிறந்த செயல்பாட்டினை முன்னெடுக்க வேண்டும்,'' என்றார்.
நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் ரூத் பெலிசியா, சிபியா ஜெய வினோதினி ஆகியோர் மூலிகை தோட்டங்களின் அவசியம் குறித்து விளக்கம் அளித்தனர். மாணவர்கள், 'பிளாஸ்டிக் இல்லாத நீலகிரி' என, உறுதி மொழி எடுத்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தேசிய பசுமைப்படை செய்திருந்தது.