Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கல்லாறில் 1.60 லட்சம் பாக்கு நாற்றுகள் விற்பனைக்கு தயார்

கல்லாறில் 1.60 லட்சம் பாக்கு நாற்றுகள் விற்பனைக்கு தயார்

கல்லாறில் 1.60 லட்சம் பாக்கு நாற்றுகள் விற்பனைக்கு தயார்

கல்லாறில் 1.60 லட்சம் பாக்கு நாற்றுகள் விற்பனைக்கு தயார்

ADDED : ஜூன் 05, 2024 09:55 PM


Google News
Latest Tamil News
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் தமிழக அரசின் கல்லாறு தோட்டக்கலை பண்ணை அமைந்துள்ளது. இந்த பண்ணையில் தட்ப வெப்ப நிலை மிதமாக இருக்கும். இதனால் இங்கு எலுமிச்சை, மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், இலவங்கப்பட்டை, பாக்கு போன்ற நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இப்பண்ணையில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகளுக்கு தேவையான பாக்கு மர நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து கல்லார் அரசு தோட்டக்கலை பண்ணை மேலாளர் மோகன் குமார் கூறுகையில், 'தற்போது கல்லாறு அரசு தோட்டக்கலை பண்ணையில், நான்கு ஆண்டுகளில் பலன் தரக்கூடிய 1.20 லட்சம் மொஹித் நகர் பாக்கு மர நாற்றுகள் மற்றும் 40 ஆயிரம் மங்களா பாக்கு மர நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.

ஒரு பாக்கு மர நாற்றின் விலை ரூ.20 ஆகும். கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் பிற மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாற்றுகளை வாங்கி கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு 8526371711, 8778645182 என்ற மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்' என்றார்.----





      Our Apps Available On




      Dinamalar

      Follow us