/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கலப்பட மது விற்பனை 13 ஊழியர்கள் 'சஸ்பெண்ட்' கலப்பட மது விற்பனை 13 ஊழியர்கள் 'சஸ்பெண்ட்'
கலப்பட மது விற்பனை 13 ஊழியர்கள் 'சஸ்பெண்ட்'
கலப்பட மது விற்பனை 13 ஊழியர்கள் 'சஸ்பெண்ட்'
கலப்பட மது விற்பனை 13 ஊழியர்கள் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூன் 03, 2024 12:38 AM
ஊட்டி;ஊட்டியில் கலப்பட மது விற்பனையில் ஈடுபட்ட மூன்று சூப்பர்வைசர்கள், 10 விற்பனையாளர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரியில் ஆறு தாலுகாவில், 73 டாஸ்மாக் மதுகடைகள் செயல்பட்டு வருகின்றன. டாஸ்மாக் கடைகள் மூலம், தினசரி, 1.60 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகிறது. இந்த மதுக்கடைகளில் மது பாட்டிலில் போதை வஸ்துக்கள் கலந்து விற்பனை செய்யப்படுவதாக, சென்னையில் உள்ள டாஸ்மாக் பறக்கும்படை தலைமை அதிகாரிகளுக்கு ஆதாரத்துடன் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக கடந்த வாரம் ஊட்டி டாஸ்மாக் மதுக்கடையில் டாஸ்மாக் பறக்கும்படையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், 'சூப்பர்வைசர்கள், விற்பனையாளர்கள்,' என, 5 பேர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு, கலப்பட மது பாட்டில்களை, பரிசோதனைக்கு எடுத்து சென்றனர்.ஊட்டி லோயர் பஜார், நகராட்சி சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீர் சோதனை நடந்துள்ளது. அதில், கலப்பட மது விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கண்ணன் கூறுகையில், '' குறிப்பிட்ட கடைகளில் கலப்பட மது விற்பனை செய்தது தொடர்பாக, ஊட்டி லோயர் பஜார் டாஸ்மாக் கடையின் சூப்பர்வைசர் சஜி மற்றும் 2 விற்பனையாளர்கள், நகராட்சி சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையின் சூப்பர்வைசர்கள் பாண்டியன், வால்மிகி மற்றும் 8 விற்பனையாளர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.