/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பள்ளி மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி வகுப்பு
பள்ளி மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி வகுப்பு
பள்ளி மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி வகுப்பு
பள்ளி மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி வகுப்பு
ADDED : ஜூன் 03, 2024 12:41 AM

ஊட்டி;ஊட்டி மாவட்ட மைய நுாலகத்தில், பள்ளி மாணவ, மாணவியருக்கு, மூன்று நாள் கட்டணம் இல்லா கோடடைகால பயிற்சி வகுப்பு நடந்தது.
நீலகிரி மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் மற்றும் இல்லம் தேடி கல்வி, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில், 2024ம் ஆண்டு மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி வகுப்பு நடந்தது.
ஊட்டி மாவட்ட மைய நூலகத்தில் காலை, 10:30 மணி முதல், 12:30 மணி வரை, மூன்று நாட்கள் பயிற்சி வகுப்பு நடந்தது.
இதில், கட்டணம் இல்லாமல், கம்ப்யூட்டர், ஓவியம், பரதநாட்டியம் மற்றும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. ஊட்டி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, திரளான பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்று பயிற்சி பெற்றனர். அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.