/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வேன் கவிழ்ந்து விபத்து 11 சுற்றுலா பயணிகள் காயம் வேன் கவிழ்ந்து விபத்து 11 சுற்றுலா பயணிகள் காயம்
வேன் கவிழ்ந்து விபத்து 11 சுற்றுலா பயணிகள் காயம்
வேன் கவிழ்ந்து விபத்து 11 சுற்றுலா பயணிகள் காயம்
வேன் கவிழ்ந்து விபத்து 11 சுற்றுலா பயணிகள் காயம்
ADDED : ஜூலை 29, 2024 02:43 AM

குன்னுார்;குன்னுார் மலைப்பாதையில் ஆறாவது கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 11 பேர் காயமடைந்தனர்.
நெய்வேலி முத்தாண்டி குப்பம் பகுதியை சேர்ந்த, 21 பேர் ஊட்டிக்கு சுற்றுலா வேனில் வந்து நேற்று சொந்த ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது, குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஆறாவது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையிலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலின் பேரில், போலீசார்; பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு, 108 ஆம்புலன்சில், அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில், லேசான காயமடைந்த பாலமுருகன்,36, சுபாஸ்ரீ,30, சிவா,21, நவீன் ராஜ் 26, அனுசுயா,22, மணியரசன்,40 உட்பட, 11 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்