/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பணிமனை அமைக்க இடம் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு பணிமனை அமைக்க இடம் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு
பணிமனை அமைக்க இடம் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு
பணிமனை அமைக்க இடம் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு
பணிமனை அமைக்க இடம் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு
ADDED : ஜூலை 29, 2024 02:43 AM
ஊட்டி;'நீலகிரி மாவட்ட மோட்டார் வாகன பழுது பார்க்கும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், பணிமனை அமைக்க இடம் தேர்வு செய்து வழங்க வேண்டும்,' என, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
சங்க தலைவர் வினோத்குமார் மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்த மனு:
ஊட்டியில், மோட்டார் வாகன பழுது பார்க்கும் தொழிலாளர்களாகிய நாங்கள்,
60 ஆண்டுகளாக, மெக்கானிக், டிங்கர், பெயின்டர், எலக்ட்ரீசியன், சீட் ஒர்க், வாட்டர் வாஷ், வீல் அலைன்மென்ட், லேத் ஒர்க், ஸ்டிக்கர் மற்றும் டயர் பஞ்சர் ஆகிய தொழில்களை செய்து வருகிறோம்.
போதிய இடவசதி இல்லாததால், தொழில் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. மழை நாட்களில் சேற்றில் புறண்டு பணி செய்ய வேண்டிய நிலை உள்ளது.
மேலும், வாடகை, மாசு கட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகிய இடையூறுகளை சந்தித்து வருகிறோம். இடம் அளிக்க வேண்டி, கடந்த மூன்று ஆண்டுகளாக மாவட்ட கலெக்டர், காவல்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே, மோட்டார் வாகன பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நலன் கருதி, இடம் தேர்வு செய்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.