ADDED : மே 29, 2025 01:36 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை அடுத்த வடுகம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் கந்தசாமி மகன் வேலவேந்தன், 50; கூலித்தொழிலாளி. ஆட்டோவும் ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை, 4:00 மணிக்கு ஆர்.புதுப்பட்டியில் இருந்து டூவீலரில் வடுகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். வடுகத்திற்கு சற்று முன், முன்னால் சென்றுகொண்டிருந்த டிராக்டரை முந்த முயன்றார். அப்போது, வேலவேந்தன் டூவீலர் மீது டிராக்டர் மோதியதில் கீழே விழுந்தார். அப்போது, அவர் மீது டிராக்டர் ஏறி இறங்கியது. இதில், வேலவேந்தன் உடல் நசுங்கி பலியானார். நாமகிரிப்பேட்டை போலீசார்
விசாரிக்கின்றனர்.