/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/குமாரபாளையத்தில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன்குமாரபாளையத்தில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன்
குமாரபாளையத்தில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன்
குமாரபாளையத்தில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன்
குமாரபாளையத்தில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன்
ADDED : பிப் 06, 2024 11:08 AM
நாமக்கல்: 'பெண்கள் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில், குமாரபாளையத்தில், அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் துவக்க வேண்டும்' என, ம.நீ.ம., மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி மாவட்ட அமைப்பாளர் சித்ரா, நாமக்கல் எஸ்.பி., ராஜேஷ்கண்ணனிடம் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
குமாரபாளையத்தில், 1,000க்கும் மேற்பட்ட விசைத்தறி, கைத்தறி கூடங்கள், 500க்கும் அதிகமான சாயப்பட்டறைகள், ஸ்பின்னிங் மில்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகள் செயல்படுகின்றன.
இவற்றில், பாலியல் துன்புறுத்தல்கள், குடிபோதையில் கணவன், மனைவி தகராறு, நடைபயிற்சியில் ற பெண்ணிடம் அத்துமீறல், வழிப்பறி, செயின் பறிப்பு, கட்டுமான நிறுவனத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமை.
பஸ் ஸ்டாண்டில் மாணவியரை கேலி, கிண்டல் செய்யும் ரவுடிகள், மன உளைச்சலில் மாணவ, மாணவியர், இளம் பெண்கள் தற்கொலை என பல்வேறு பிரச்னைகள் குமாரபாளையம் தாலுகாவில் ஏற்பட்டு வருகின்றன.
பெண்கள் குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தாலுகா அந்தஸ்து பெற்ற குமாரபாளையத்தில், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இல்லாதது பெரும் குறையாக உள்ளது.
பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை என்றால், திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்புகின்றனர். அதனால், அலைச்சல் ஏற்படுவதுடன், வருவாய் இழப்பு, கால விரயம் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
அவற்றை கருத்தில் கொண்டும், பெண்கள் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணவும், குமாரபாளையத்தில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.