/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க.,வை தோற்கடிப்போம்: விவசாய சங்கம்லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க.,வை தோற்கடிப்போம்: விவசாய சங்கம்
லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க.,வை தோற்கடிப்போம்: விவசாய சங்கம்
லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க.,வை தோற்கடிப்போம்: விவசாய சங்கம்
லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க.,வை தோற்கடிப்போம்: விவசாய சங்கம்
ADDED : ஜன 06, 2024 01:05 PM
நாமக்கல்: உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம், மோகனுாரின் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன், நேற்று நடந்தது. மாநில தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பொன்னுசாமி வரவேற்றார்.
பொதுச்செயலாளர் பழனிமுருகன், பொருளாளர் ராஜேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, கரும்புக்கான கொள்முதல் விலை உயர்த்தி வழங்க கோரி, விவசாயிகள் கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து, மாநில தலைவர் வேலுசாமி, நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், கரும்பு டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் வழங்கப்படும் என, தி.மு.க., வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சி அமைத்தும், வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டது. விவசாயிகளை ஏமாற்றிய, தி.மு.க., அரசை கண்டித்து, நெற்றியில் பட்டை நாமம் போட்டு, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், இந்த போராட்டம் நடத்துகிறோம். அரசு அறிவித்தபடி, டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் அறிவித்தாலும், அந்த விலை கட்டுப்படியாகாது.
உற்பத்தி செலவை கருத்தில் கொண்டு டன் ஒன்றுக்கு, 6,000 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில், கோட்டையை நோக்கி போராட்டம் நடத்து உள்ளோம். வரும், லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும், தி.மு.க., மற்றும் அதன் தோழமை கட்சிகளும், விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதை கண்டித்து, தோற்கடிப்போம் என, எச்சரிக்கை விடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மாநில துணைத்தலைவர் ராஜா
பெருமாள், செயலாளர் வேல்நாயக்கர், வேலுார் மண்டல செயலாளர் வெங்கடபதிரெட்டி, மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.