Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/100 பா.ஜ., எம்எல்ஏ.,க்களை தூக்குங்க; ஆட்சி அமைங்க: அகிலேஷ் யாதவ் கொடுத்த "ஆபர்"

100 பா.ஜ., எம்எல்ஏ.,க்களை தூக்குங்க; ஆட்சி அமைங்க: அகிலேஷ் யாதவ் கொடுத்த "ஆபர்"

100 பா.ஜ., எம்எல்ஏ.,க்களை தூக்குங்க; ஆட்சி அமைங்க: அகிலேஷ் யாதவ் கொடுத்த "ஆபர்"

100 பா.ஜ., எம்எல்ஏ.,க்களை தூக்குங்க; ஆட்சி அமைங்க: அகிலேஷ் யாதவ் கொடுத்த "ஆபர்"

ADDED : ஜூலை 18, 2024 01:26 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

லக்னோ: உ.பி., பா.ஜ.,வுக்குள் உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், '100 எம்.எல்.ஏ.,க்களை கொண்டு வந்து ஆட்சி அமைக்கவும்' என எக்ஸ் சமூகவலைதளத்தில் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் சூசகமாக பதிவிட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் ஆட்சி அமைக்க 202 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு வேண்டும். தற்போது ஆட்சியில் உள்ள பா.ஜ., பக்கம் 255 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சிக்கு 111 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். தற்போது உ.பி பா.ஜ.,வுக்குள் உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலில் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காததுடன், சறுக்கலை சந்தித்த நிலையில், கட்சியின் மாநிலத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை மாற்ற, பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளது.

அகிலேஷ் கொடுத்த 'ஆபர்'


இந்நிலையில், இன்று (ஜூலை 18) 'பருவமழை சலுகை, 100 எம்.எல்.ஏ.,க்களை கொண்டு வந்து ஆட்சி அமைக்கவும்' என உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் சூசகமாக எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

பா.ஜ., ஆட்சியை கவிழ்க்க அகிலேஷ் யாதவ் திட்டம் தீட்டி வருகிறார். இதனால் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களை அகிலேஷ் தனக்கு ஆதரவாக மாற்ற, களத்தில் இறங்கி உள்ளார் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us