/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/டிரினிட்டி இன்டர்நேஷனல் பள்ளி 16ம் ஆண்டு விளையாட்டு விழாடிரினிட்டி இன்டர்நேஷனல் பள்ளி 16ம் ஆண்டு விளையாட்டு விழா
டிரினிட்டி இன்டர்நேஷனல் பள்ளி 16ம் ஆண்டு விளையாட்டு விழா
டிரினிட்டி இன்டர்நேஷனல் பள்ளி 16ம் ஆண்டு விளையாட்டு விழா
டிரினிட்டி இன்டர்நேஷனல் பள்ளி 16ம் ஆண்டு விளையாட்டு விழா
ADDED : செப் 03, 2025 12:51 AM
நாமக்கல், நாமக்கல் டிரினிட்டி இன்டர்நேஷனல் பள்ளி, 16ம் ஆண்டு விளையாட்டு விழா, தலைவர் பழனிசாமி தலைமையில் நடந்தது. செயலாளர் ராம சீனிவாசன் வரவேற்றார். நாமக்கல் எஸ்.பி., விமலா, மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினார்.
தொடர்ந்து, மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி தலைவர், செயலாளர், மற்றும் பள்ளி வளாக ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த் ஆகியோர் பரிசு வழங்கினர். மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக சிலம்பம், கராத்தே, யோகா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
சிறப்பு அழைப்பாளர்களாக தங்கம் மருத்துவமனை மருத்துவர் தீபன் ராஜமாணிக்கம், தென்பாண்டியன், ரவீந்திரன், நல்லுசாமி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தினர். பள்ளி முதல்வர் ஆனந்த் சாம் விழாவை ஒருங்கிணைத்தார்.