ரூ.15 லட்சத்திற்கு பருத்தி விற்பனை
ரூ.15 லட்சத்திற்கு பருத்தி விற்பனை
ரூ.15 லட்சத்திற்கு பருத்தி விற்பனை
ADDED : செப் 03, 2025 02:15 AM
நாமக்கல், நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 15 லட்சம் ரூபாய்க்கு பருத்தி விற்பனையானது.
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் செயல்படும் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று நடந்த ஏலத்திற்கு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், 560 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில், ஆர்.சி.ஹெச்., ரக பருத்தி, 7,589 ரூபாய் முதல், 7,000 ரூபாய்; கொட்டு மட்ட ரகம், 4,589 ரூபாய் முதல், 7,900 ரூபாய் என, மொத்தம், 15 லட்ச ரூபாய்க்கு விற்பனையானது. இந்த ஏலத்தில் ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் பங்கேற்றனர்.