/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பயன்பாட்டிற்கு வராத மாசிலா அருவி குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்பயன்பாட்டிற்கு வராத மாசிலா அருவி குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
பயன்பாட்டிற்கு வராத மாசிலா அருவி குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
பயன்பாட்டிற்கு வராத மாசிலா அருவி குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
பயன்பாட்டிற்கு வராத மாசிலா அருவி குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ADDED : ஜன 11, 2024 12:01 PM
சேந்தமங்கலம்: கொல்லிமலை மாசில அருவி பயன்பாட்டுக்கு வராததால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, அரியூர் நாடு பஞ்., பகுதியில் மாசிலா அருவி அமைந்துள்ளது. விடுமுறை நாட்களில், இந்த அருவியில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த அருவியை இதற்கு முன், அப்பகுதியை சேர்ந்த ஆடவர் குழுவினர் பராமரித்து வந்தனர். அதன்பின், வனத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு, ஆடவர் குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, கொல்லிமலை தாசில்தார் அப்பன்ராஜ் தலைமையில், இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், உடன்பாடு ஏற்படாதால், 'மாவட்ட கலெக்டர் இதுகுறித்து முடிவு எடுப்பார்' என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ஆறு மாதங்களாகியும் இதுவரை மாசிலா அருவி சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு வராததால், கொல்லிமலைக்கு விடுமுறை தினங்களில் வெளியூர், வெளி மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள், மாசிலா அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.