Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/பாக்., ராணுவத்தில் கிறிஸ்தவ பெண்ணுக்கு முக்கிய பதவி

பாக்., ராணுவத்தில் கிறிஸ்தவ பெண்ணுக்கு முக்கிய பதவி

பாக்., ராணுவத்தில் கிறிஸ்தவ பெண்ணுக்கு முக்கிய பதவி

பாக்., ராணுவத்தில் கிறிஸ்தவ பெண்ணுக்கு முக்கிய பதவி

UPDATED : ஜூன் 03, 2024 12:58 PMADDED : ஜூன் 02, 2024 10:40 PM


Google News
Latest Tamil News
இஸ்லாமாபாத்: கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் பாக்.,ராணுவத்தின் பிரிகேடியர் பதவியில் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

பாகிஸ்தான் ராணுவத்தில் மருத்துவ பிரிவில் 26 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் கிறிஸ்தவமதத்தை சேர்ந்த பெண் ஹெலன் மேரி ராபர்ட்ஸ். ராணுவத்தில் பரிகேடியர்களாக தேர்வு செய்யப்படுபவர்கள் தேர்வு வாரியத்தால் நியமனம் செய்யப்படுகின்றனர். இந்நிலையில் பிரிகேடியர் பதவிக்கு தற்போது கிறிஸ்தவ பெண் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்,

இவரது நியமனத்திற்கு பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கடின உழைப்பாளி பெண்கள் நாட்டிற்கு தனித்துவமாக சேவையாற்றும் பெண்கள் குறித்து முழு தேசமும் பெருமிதம் கொள்கிறது என வாழ்த்தி உள்ளார்.

கடந்த ஆண்டு ராவல்பிண்டியில் உள்ள கிறிஸ்தவ சர்ச்சில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது, ​​நாட்டின் வளர்ச்சியில் சிறுபான்மை சமூகத்தினர் ஆற்றிய பங்கை பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர் பாராட்டினார்.

2021 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தரவுகளின்படி, நாட்டில் 96.47 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர், அதைத் தொடர்ந்து 2.14 சதவீதம் இந்துக்கள், 1.27 சதவீதம் கிறிஸ்தவர்கள், 0.09 சதவீதம் அஹ்மதி முஸ்லிம்கள் மற்றும் 0.02 சதவீதம் பேர் உள்ளனர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us