ஈரான்: அதிபர் தேர்தலில் அகமதிநிஜாத் மீண்டும் போட்டி
ஈரான்: அதிபர் தேர்தலில் அகமதிநிஜாத் மீண்டும் போட்டி
ஈரான்: அதிபர் தேர்தலில் அகமதிநிஜாத் மீண்டும் போட்டி
UPDATED : ஜூன் 02, 2024 08:00 PM
ADDED : ஜூன் 02, 2024 07:55 PM

டெஹ்ரான்: விரைவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளார் முன்னாள் அதிபர் அஹமதிநிஜாத்.
ஈரான் அதிபராக இருந்த இப்ராஹிம் ரைஸி கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். இதனையடுத்து புதிய அதிபராக தேர்ந்தெடுக்க வரும் 28-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் அகமதிநிஜாத் போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
முன்னாள் அதிபரானஅகமதிநிஜாத் கடந்த 2005-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு அதிபரானார். அரசியல் சூழ்நிலை காரணமாக அவர் 2013 ம் ஆண்டில் பதவி விலகினார்.
தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டில் தேர்தலில் நிற்பதற்கு அந்நாட்டின் கார்டியன் கவுன்சில் தடை விதித்தது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடுவோரின் தகுதி பட்டியலில் அகமதியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
அதிபர் தேர்தலில் போட்டியிடுவோருக்கான தகுதியான வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வரும் 11-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அப்போது அகமதிநிஜாத் போட்டியிடாமல் தடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.