/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மாவட்டத்தில் 8 மையங்களில் குழு விளையாட்டு போட்டிமாவட்டத்தில் 8 மையங்களில் குழு விளையாட்டு போட்டி
மாவட்டத்தில் 8 மையங்களில் குழு விளையாட்டு போட்டி
மாவட்டத்தில் 8 மையங்களில் குழு விளையாட்டு போட்டி
மாவட்டத்தில் 8 மையங்களில் குழு விளையாட்டு போட்டி
ADDED : ஜூலை 25, 2024 01:26 AM
நாமக்கல்: மாவட்டத்தில், 8 மையங்களில், பாரதியார், குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள், இன்று நடக்கின்றன.ஆண்டுதோறும், பாரதியார் மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அதில், 14, 17, 19 வயதுக்குட்-பட்ட என, மூன்று பிரிவுகளில் போட்டி நடத்தப்படும். தற்போது, நாமக்கல் மாவட்டத்தில், பாரதியார் மற்றும் குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள் துவங்கி உள்ளன. இன்று (ஜூலை, 25), 14 வயதுக்குட்பட்ட மாணவருக்கான, வட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன.நாமக்கல், சேந்தமங்கலம், மோகனுார், ராசிபுரம், மல்லசமுத்திரம், குமாரபாளையம், நாமகிரிப்பேட்டை, பரமத்தி ஆகிய, எட்டு மையங்களில், கால்பந்து, கூடைப்பந்து, பூப்பந்து, எறிபந்து, இறகு பந்து, வலைய பந்து, வளைகோல் பந்து, கைப்பந்து, மென்பந்து என, குழு விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. வரும், 30ல், 17 வயதுக்குட்பட்ட மாணவியருக்கும், ஆக., 1ல், 17 வயதுக்குட்பட்ட மாணவருக்கும், ஆக., 8ல், 19 வயதிற்குட்பட்ட மாணவியருக்கும், ஆக., 9ல், 19 வயதுக்குட்பட்ட மாணவருக்கும் குழு விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. இதில் வெற்றி பெற்றவர்கள், மாவட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர் என்-பது குறிப்பிடத்தக்கது.