Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பேச்சுவார்த்தையில் முடிவு எட்டாததால் தொடரும் டேங்கர் லாரி ஸ்டிரைக்

பேச்சுவார்த்தையில் முடிவு எட்டாததால் தொடரும் டேங்கர் லாரி ஸ்டிரைக்

பேச்சுவார்த்தையில் முடிவு எட்டாததால் தொடரும் டேங்கர் லாரி ஸ்டிரைக்

பேச்சுவார்த்தையில் முடிவு எட்டாததால் தொடரும் டேங்கர் லாரி ஸ்டிரைக்

ADDED : ஜன 05, 2024 11:56 AM


Google News
நாமக்கல்: தென் மண்டல பல்க் எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தையில், முடிவு எட்டாததால் நேற்றும் நான்காவது நாளாக ஸ்டிரைக் தொடர்ந்தது.

தென் மண்டல பல்க் எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. 5,500 டேங்கர் லாரிகள் உள்ளன. கர்நாடக மாநிலம், மங்களுரூவில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, 1,500 எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள ஆயில் நிறுவன அதிகாரிகள், டேங்கர் லாரிகளில் கிளீனர் கட்டாயம் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே லோடு ஏற்றுவோம் என கெடுபிடி காண்பித்து

வருகின்றனர். இதை கண்டித்து கடந்த, 1 முதல் லோடு ஏற்றாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டு

வருகின்றனர்.

இதற்கிடையில் நேற்று டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் ஆயில் நிறுவன அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் முடிவு எதுவும் எட்டப்படாததால், நேற்று நான்கா-வது நாளாக போராட்டம் நீடித்தது.

இதனால் மங்களூரு சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கோவை, ஈரோடு உள்ளிட்ட பிளான்டுகளுக்கு சமையல் காஸ் வருவது தடைபட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் கோவை, ஈரோடு பகுதிகளில் சமையல் காஸ் தட்டுப்பாடு வரும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்றும் (வெள்ளிக்கிழமை) பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us