/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/போதை பொருள் தடுப்பு குறித்து ஆய்வு கூட்டம்போதை பொருள் தடுப்பு குறித்து ஆய்வு கூட்டம்
போதை பொருள் தடுப்பு குறித்து ஆய்வு கூட்டம்
போதை பொருள் தடுப்பு குறித்து ஆய்வு கூட்டம்
போதை பொருள் தடுப்பு குறித்து ஆய்வு கூட்டம்
ADDED : ஜூன் 21, 2024 07:12 AM
நாமக்கல் : நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் உமா தலைமையில் நேற்று போதை பொருள்கள் தடுப்பு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் நடந்தது.இதில் கலெக்டர் உமா பேசியதாவது: கள்ளச்சாராயம் மற்றும் வெளிமாநில மதுவகைகள் விற்பனை செய்யப்படுகிறதா என, ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிக்கு, 100 மீட்டர் அருகில் போதை பொருள் விற்பனை செய்யப்படுகிறதா என்று தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் குழந்தைகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும். இவ்வாறு பேசினார்.எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, கொல்லிமலை, செங்கரை, முள்ளுக்குருச்சி, மெட்டாலா, ஆயில்பட்டி, வடுகம், எருமப்பட்டி, வெப்படை, பள்ளிபாளையம், குமாரபாளையம், ஜேடர்பாளையம் பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா என ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.டி.ஆர்.ஓ., சுமன், ஆர்.டி.ஓ., சுகந்தி, சி.இ.ஓ., மகேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.