/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கள்ளச்சாராயம் குறித்து தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் வெளியீடுகள்ளச்சாராயம் குறித்து தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் வெளியீடு
கள்ளச்சாராயம் குறித்து தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் வெளியீடு
கள்ளச்சாராயம் குறித்து தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் வெளியீடு
கள்ளச்சாராயம் குறித்து தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் வெளியீடு
ADDED : ஜூன் 21, 2024 07:12 AM
நாமக்கல் : கள்ளச்சாரயம் குறித்த விபரங்களை தெரிவிக்க, மாவட்ட எஸ்.பி., வாட்ஸ் ஆப் எண் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து, நாமக்கல் காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர், விற்பவர் மற்றும் கடத்துபவர்களை பற்றிய தகவல்களை, 88383 52334 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கலாம். இது மாவட்ட எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும். இதில் தெரிவிக்கப்படும் தகவல்கள், தகவல் தருபவர்கள் குறித்த விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.