/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பாவை கல்வி நிறுவனங்களில் திருக்குறள் வினாடி வினா போட்டிபாவை கல்வி நிறுவனங்களில் திருக்குறள் வினாடி வினா போட்டி
பாவை கல்வி நிறுவனங்களில் திருக்குறள் வினாடி வினா போட்டி
பாவை கல்வி நிறுவனங்களில் திருக்குறள் வினாடி வினா போட்டி
பாவை கல்வி நிறுவனங்களில் திருக்குறள் வினாடி வினா போட்டி
ADDED : ஜூன் 21, 2024 07:12 AM
நாமக்கல் : பாவை கல்வி நிறுவனங்களில் பாவை தமிழ் மன்றம் சார்பில், திருக்குறள் வினாடி வினா போட்டி நடந்தது.பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் நடராஜன் தலைமை வகித்தார்.
சிறப்பாளராக அமெரிக்கா புளோரிடா பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியரும், தமிழ் அறிஞருமான முனைவர்.மணிமேகலை ராமமூர்த்தி கலந்து கொண்டார். பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கைநடராஜன் வாழ்த்தி பேசினார்.முனைவர்.மணிமேகலை ராமமூர்த்தி பேசுகையில்,'' மாணவர்கள் திருக்குறளின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும். திருக்குறளில் கடவுள் வாழ்த்து, மொழி வாழ்த்து, நட்பு, அன்பு, இல்லறம், குடும்பம், மக்கட்பேறு, நிர்வாகம், பொருளுடைமை, மருத்துவம் என்று வாழ்விற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கியுள்ளது,'' என்றார்.வினாடி வினா போட்டியில் முல்லை அணி, மருதம் அணி மோதியது. இதில் முல்லை அணி முதலிடம், மருதம் அணி இரண்டாமிடம் பெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர், சிறப்பாளர் ஆகியோர் சான்றிதழ், பரிசு தொகை வழங்கினர்.பாவை கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மோகன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.