/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நாமக்கல்லில் வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நாமக்கல்லில் வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 21, 2024 07:12 AM
நாமக்கல் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வழக்கறிஞர் சங்கம் சார்பில் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் கவுரவ செயலாளரும், நாமக்கல் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தலைவருமாகன அய்யாவு தலைமை வகித்தார்.
செயலாளர் கணேசன், மூத்த வழக்கறிஞர் வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், குற்றவியல் சட்டங்களின் பெயரை இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் மத்திய அரசு மாற்றியமைக்க முடிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சட்டங்களை சீர்குலைக்கும் வகையில் பாராளுமன்றத்தில் எந்தவித விவாதமுமின்றி நிறைவேற்றுவதோடு, ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய அரசு உடனடியாக அந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகத்தில் வக்கீல்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.