/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ஜி.ஹெச்., சாலையை ஆக்கிரமித்து மேடை அமைப்பு;நோயாளிகள், பொதுமக்கள் அவதி ஜி.ஹெச்., சாலையை ஆக்கிரமித்து மேடை அமைப்பு;நோயாளிகள், பொதுமக்கள் அவதி
ஜி.ஹெச்., சாலையை ஆக்கிரமித்து மேடை அமைப்பு;நோயாளிகள், பொதுமக்கள் அவதி
ஜி.ஹெச்., சாலையை ஆக்கிரமித்து மேடை அமைப்பு;நோயாளிகள், பொதுமக்கள் அவதி
ஜி.ஹெச்., சாலையை ஆக்கிரமித்து மேடை அமைப்பு;நோயாளிகள், பொதுமக்கள் அவதி
ADDED : செப் 22, 2025 02:18 AM
ப.வேலுார்:ப.வேலுார், அண்ணா சிலை அருகே, நேற்று இரவு, 8:00 மணிக்கு, தி.மு.க., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதற்காக, நேற்று காலை, 10:00 மணிக்கு சாலையை ஆக்கிரமித்து மேடை அமைக்கும் பணி நடந்தது. அப்போது, இருசக்கர வாகனம் மட்டுமே செல்லும்படி வழியை ஏற்படுத்தி கொடுத்துவிட்டு, பஸ் ஸ்டாண்ட் மற்றும் ஜி.ஹெச்., அருகே பஸ், நான்கு சக்கர வாகனம் செல்ல முடியாதபடி, ப.வேலுார் போலீசார் சாலையை அடைத்தனர். இந்த சாலை, ப.வேலுார் பஸ் ஸ்டாண்ட், ஜி.ஹெச்.,க்கு செல்லும் வழியாகவும், காவிரி ஆற்றுக்கு செல்லும் பிரதான சாலையாகவும் உள்ளது.
நேற்று, புரட்டாசி மஹாளய அமாவாசையையொட்டி, காவிரி ஆற்றுக்கு சென்று முன்னோர்களுக்கு திதி கொடுக்க ஏராளமானோர் சென்றனர். அப்போது, சாலை அடைப்பால், பல கிலோ மீட்டர் சுற்றி காவிரி ஆற்றுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும், அப்பகுதியில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், கரூர், திண்டுக்கல், மதுரை செல்லும் பஸ்கள் நகருக்குள் உள்ளே நுழைய முடியாமல், பழைய பைபாஸ் சாலை வழியாக சென்றது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். தொடர்ந்து, மதியம், 3:00 மணிக்கு இரு பக்க சாலையை ஆக்கிரமித்து பிரசார மேடையும், கட்சி தொண்டர்கள் அமரும் வகையில் பிளாஸ்டிக் சேர்களையும் போட்டிருந்தனர். இதனால், இருசக்கர வாகனம் செல்லும் வழியையும், டிராபிக் போலீசார் முற்றிலும் தடை செய்தனர். இதனால், நேற்று ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தைக்கு செல்லும் பொதுமக்கள், பஸ் ஸ்டாண்ட் செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும், 500 அடி துாரத்தில் உள்ள ஜி.ஹெச்.,க்கு ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல், 4 கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டு சென்றது.இதுகுறித்து, ப.வேலுார் டி.எஸ்.பி., சங்கீதாவிடம் கேட்டபோது, ''ப.வேலுார், அண்ணா சிலை அருகே பொதுக்கூட்டம் நடத்துவது வழக்கமானது தான். ஆனால், இப்பகுதியில் இருபக்கமும் சாலையை ஆக்கிரமித்து பொதுக்கூட்டம் நடத்த எழுத்துப்பூர்வமாக எந்த அனுமதியும் எங்களிடம் கோரவில்லை. பொதுமக்கள் அப்பகுதியை, இருசக்கர வாகனத்தில் கடந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உடனடியாக அப்பகுதிக்கு டிராபிக் போலீசாரை அனுப்பி போக்குவரத்து சீரமைக்கப்படும்,'' என்றார்.