ADDED : செப் 22, 2025 02:16 AM
குமாரபாளையம்:குமாரபாளையத்தில் லாட்டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., பிரபாகர் தலைமையிலான போலீசார், தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, குமாரபாளையம் ராமர் கோவில் பகுதி, பஸ் ஸ்டாண்ட் வளாகம் ஆகிய பகுதிகளில் லாட்டரி விற்பது தெரியவந்தது.
அங்கு சென்ற போலீசார், லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட சசிகுமார், 40, சபரி, 36, விமல்குமார், 41, கார்த்தி, 45, ஆகிய நால்வரை கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.