/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ செல்லப்பம்பட்டி மகா மாரியம்மன் கோவிலில் நவராத்திரி கொலு துவக்கம் செல்லப்பம்பட்டி மகா மாரியம்மன் கோவிலில் நவராத்திரி கொலு துவக்கம்
செல்லப்பம்பட்டி மகா மாரியம்மன் கோவிலில் நவராத்திரி கொலு துவக்கம்
செல்லப்பம்பட்டி மகா மாரியம்மன் கோவிலில் நவராத்திரி கொலு துவக்கம்
செல்லப்பம்பட்டி மகா மாரியம்மன் கோவிலில் நவராத்திரி கொலு துவக்கம்
ADDED : செப் 22, 2025 02:18 AM
நாமக்கல்:நாமக்கல் அருகே, செல்லப்பம்பட்டியில், சுயம்பு மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, 14ம் ஆண்டு நவராத்திரி விழா இன்று தொடங்கி, அக்., 1 வரை நடக்கிறது. ஒன்பது படிகளில் கொலு வைக்கப்பட்டு, அதில் பல்வேறு வகையான தெய்வங்களின் திரு உருவங்கள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.
இந்தாண்டு புதிதாக, மதுரை மீனாட்சி அம்மன் சிலை மற்றும் கருப்புசாமி சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. இன்று துவங்கி நிறைவு நாள் வரை, ஒவ்வொரு நாளும், மகா மாரியம்மன் சுவாமி தங்க கவச அலங்காரம், நிசும்ப சூதனி அம்மன், வராகி அம்மன், ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார், மேல்மலையனுார் அங்காளம்மன், கன்னியாகுமரி பகவதி அம்மன், நைனாமலை பச்சையம்மன், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன், பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன், கூத்தனுார் சரஸ்வதி அம்மன் ஆகிய அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.