/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாமக்கல் பெருமைக்கு சான்று கவிஞர் ராமலிங்கம்,சிலம்பொலி செல்லப்பன்: மரபின்மைந்தர் முத்தையா நாமக்கல் பெருமைக்கு சான்று கவிஞர் ராமலிங்கம்,சிலம்பொலி செல்லப்பன்: மரபின்மைந்தர் முத்தையா
நாமக்கல் பெருமைக்கு சான்று கவிஞர் ராமலிங்கம்,சிலம்பொலி செல்லப்பன்: மரபின்மைந்தர் முத்தையா
நாமக்கல் பெருமைக்கு சான்று கவிஞர் ராமலிங்கம்,சிலம்பொலி செல்லப்பன்: மரபின்மைந்தர் முத்தையா
நாமக்கல் பெருமைக்கு சான்று கவிஞர் ராமலிங்கம்,சிலம்பொலி செல்லப்பன்: மரபின்மைந்தர் முத்தையா
ADDED : செப் 22, 2025 02:19 AM
நாமக்கல்:''நாமக்கல்லின் பெருமைக்கு சான்றாக விளங்குபவர்கள் கவிஞர் ராமலிங்கம், மற்றொருவர் சிலம்பொலி செல்லப்பன்,'' என, தமிழறிஞர் மரபின்மைந்தர் முத்தையா பேசினார்.சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை சார்பில், சிலப்பதிகார பெருவிழா மற்றும் சிலம்பொலியார், 96வது பிறந்த நாள் விழா, நாமக்கல்லில் கொண்டாடப்பட்டது. பி.ஜி.பி., குழும தலைவர் பழனி ஜி.பெரியசாமி தலைமை வகித்தார். நாமக்கல் கொங்கு நாட்டு வேளாளர் சங்க தலைவர் வெங்கடாசலம் வரவேற்றார். நாமக்கல் தமிழ்ச்சங்க செயலாளர் நாராயணமூர்த்தி விருதாளர்கள் அறிமுக உரையாற்றினார்.
இலங்கை கிழக்கு பல்கலை கலை கலாசார பீடம், ஹிந்து நாகரிக துறை முன்னாள் துறைத்தலைவர் பேராசிரியர் சாந்திகேசவனுக்கு, 'இளங்கோ விருது', 50,000 ரூபாய் பொற்கிழி வழங்கப்பட்டது. மேலும், நாமக்கல் பாவை பொறியியல் கல்லுாரி மூன்றாம் ஆண்டு உயிரியல் மருத்துவ பொறியியல் மாணவி அபர்ணாவுக்கு, 'சிலம்பொலியார் மாணவர் விருது', 10,000 ரூபாய் பொற்கிழி வழங்கப்பட்டது.சிலம்பொலியார் குறித்து தமிழறிஞர், 'மரபின்மைந்தன்' முத்தையா பேசுகையில், ''நாமக்கல்லின் பெருமைக்கு சான்றாக விளங்குபவர்கள் கவிஞர் ராமலிங்கம், மற்றொருவர் சிலம்பொலி செல்லப்பன். எவ்வாறு மேடையில் பேச வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்த தமிழறிஞர் சிலம்பொலியார். புலமைக்கு சிகரமானவர் மட்டுமல்ல, எளிமைக்கும் சொந்தக்கார மனிதராக விளங்கினார்,'' என்றார். முன்னாள் மத்திய அமைச்சர் காந்திச்செல்வன், காங்., மாநில துணைத்தலைவர் செழியன், பி.ஜி.பி., கல்வி நிறுவனங்களின் தாளாளர் கணபதி, கம்பன் கழக செயலாளர் அரசு பரமேசுவரன், பேராசிரியர் உழவன் தங்கவேலு, தமிழறிஞர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.