/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/துாய்மை பணியாளருக்கு சிறப்பு மருத்துவ முகாம்துாய்மை பணியாளருக்கு சிறப்பு மருத்துவ முகாம்
துாய்மை பணியாளருக்கு சிறப்பு மருத்துவ முகாம்
துாய்மை பணியாளருக்கு சிறப்பு மருத்துவ முகாம்
துாய்மை பணியாளருக்கு சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : ஜூன் 20, 2024 06:43 AM
நாமக்கல் : நாமக்கல் நகராட்சி நிர்வாகத்தின் கீழ், நிரந்தர துாய்மை பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என, 400க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
அவர்களின் உடல் நலனை பாதுகாக்கும் வகையில், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இலவச மருத்துவ முகாம் நடக்கும். அந்த வகையில், கடந்த நவ.,ல் மருத்துவ முகாம் நடந்தது. நடப்பாண்டு, நாமக்கல் - துறையூர் சாலையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில், நேற்று மருத்துவ முகாம் நடந்தது. நகராட்சி தலைவர் கலாநிதி தொடங்கி வைத்தார். நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன், துணைத்தலைவர் பூபதி, துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, கவுன்சிலர்கள் சரவணன், நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கண் பரிசோதனை, இருதயம், நுரையீரல், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், தோல் சார்ந்த பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்து, மாத்திரை வழங்கப்பட்டது.