Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பண்ணைக்கழிவுகளை எரியூட்டாமல் மறுசுழற்சியில் மட்கிய உரம் தயாரிப்பு: வேளாண் விஞ்ஞானி 'டிப்ஸ்'

பண்ணைக்கழிவுகளை எரியூட்டாமல் மறுசுழற்சியில் மட்கிய உரம் தயாரிப்பு: வேளாண் விஞ்ஞானி 'டிப்ஸ்'

பண்ணைக்கழிவுகளை எரியூட்டாமல் மறுசுழற்சியில் மட்கிய உரம் தயாரிப்பு: வேளாண் விஞ்ஞானி 'டிப்ஸ்'

பண்ணைக்கழிவுகளை எரியூட்டாமல் மறுசுழற்சியில் மட்கிய உரம் தயாரிப்பு: வேளாண் விஞ்ஞானி 'டிப்ஸ்'

ADDED : ஜூன் 20, 2024 06:43 AM


Google News
நாமக்கல் : 'கிராமங்களில் பண்ணைக்கழிவுகளை எரியூட்டாமல் மறுசுழற்சி செய்து, மட்கிய உரம் தயாரித்து பயன்படுத்தி, கூடுதல் செலவை குறைக்கலாம்' என, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய உதவிப்பேராசிரியர் சத்யா, தலைவர் வேல்முருகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:நாமக்கல் மாவட்டத்தில், வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள், விவசாயிகளின் உணவு தேவைக்காகவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

பயிர் அறுவடைக்கு பின் மகசூல் தவிர மற்ற கழிவுகளை மறுசுழற்சி செய்து, மண்ணில் இடுவது மிகவும் கடினமான செயலாக விவசாயிகள் கருதுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், பருவ காலங்களில் வேளாண் வேலையாட்களின் பற்றாக்குறை மற்றும் போதிய மக்கிய உரம் தயாரித்தல் குறித்த விழிப்புணர்வு இல்லாததே. வயலில் உள்ள பயிர்க்கழிவுகள், அடுத்த பயிர் சாகுபடி செய்வதற்கு தடையாக உள்ளதால், விவசாயிகள் பயிர் கழிவுகளை அப்புறப்படுத்த வயலில் அப்படியே எளிமையாக தீ வைத்து எரித்து விடுகின்றனர்.குறிப்பாக, நாமக்கல் மாவட்டத்தில், கரும்பு மற்றும் மக்காச்சோளம் சாகுபடி செய்யும் வட்டாரத்தில், அதிகமாக கரும்பு தோகை மற்றும் மக்காச்சோள தட்டைகளை தீ வைப்பது பரவலாக காணப்படுகிறது.நாமக்கல் மாவட்டத்தில், கரும்பு, 10,071 ஹெக்டேர் பரப்பளவிலும், மக்காச்சோளம், 1,814 ஹெக்டேர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்படுகிறது. கரும்பில், ஒரு ஏக்கருக்கு சராசரியாக, ஐந்து டன் என்ற அளவில் கரும்பு தோகையும், மக்காச்சோளத்தில், ஒரு ஏக்கருக்கு, 2.5 டன் மக்காச்சோள தட்டும் கழிவாக பெறப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு பார்த்தால், மாவட்டத்தில், ஒரு லட்சத்து, 25,885 டன் கரும்பு கழிவுகளும், 11,338 டன் மக்காச்சோள தட்டையும், ஆண்டு தோறும் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்டு, தீவைத்து எரிக்கபடுகிறது. தோகையை எரிப்பததால், காற்று மாசடைகிறது. மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் இறக்க நேரிடுகிறது. ஊட்டச்சத்துக்கள் எளிதில் ஆவியாகி மண்ணில் இருந்து வெளியேறுகிறது. குறிப்பாக தழைச்சத்து, சாம்பல் சத்து, கந்தக சத்து ஆவியாகி வீணாகிறது. நாமக்கல் மாவட்டத்தில், மொத்த பரப்பளவில் இருந்து, ஆண்டுக்கு, 102 டன் தழைச்சத்து, 45 டன் மணிச்சத்து, 113 டன் சாம்பல் சத்து விரயமாகிறது.இதனால், கரும்பு, மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு செலவு அதிகரிக்கிறது. செலவை குறைத்து, பொருளாதாரத்தை அதிகரிக்க, விவசாயிகள் எளிதில் மட்கக்கூடிய பண்ணை கழிவுகளை, எரியூட்டாமல், மறுசுழற்சி செய்து மட்கும் உரம் தயாரித்து, கூடுதல் செலவை குறைக்கலாம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us