ADDED : ஜூன் 20, 2024 06:43 AM
நாமக்கல் : நாமக்கல் நகர காங்., சார்பில், எம்.பி., ராகுலின், 54வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
கிழக்கு மாவட்ட தலைவர் சித்திக் தலைமை வகித்தார். நகர தலைவர் மோகன், முன்னாள் மாவட்ட தலைவர் வீரப்பன், செய்தி தொடர்பாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ராகுல் பிறந்த நாளையொட்டி, நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அர்ச்சனை செய்து, பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. மேலும், ரெட்டிப்பட்டியில் உள்ள முதியோர் இல்லத்திற்கு, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. வட்டார காங்., தலைவர்கள் தங்கராஜ், இளங்கோ, ஷேக் உசேன், மகளிரணி நிர்வாகி ராணி, மாவட்ட, நகர, வட்டார நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.குமாரபாளையம்...குமாரபாளையம் காங்., சார்பில், ராகுல் பிறந்தநாள் விழா, நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் கொண்டாடப்பட்டது. கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி, பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். துணைத்தலைவர் சிவகுமார், மாவட்ட துணைத்தலைவர் தங்கராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.திருச்செங்கோடு...நாமக்கல் மேற்கு மாவட்ட காங்., சார்பில், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில், நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமையில் ரத்ததானம் செய்தனர். மாவட்டசெயலாளர் நந்தகோபால், மாவட்ட பொருளாளர் பொன்னுசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.