/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/சேந்தமங்கலம் அரசு கல்லுாரியில் பொது கலந்தாய்வு இன்று துவக்கம்சேந்தமங்கலம் அரசு கல்லுாரியில் பொது கலந்தாய்வு இன்று துவக்கம்
சேந்தமங்கலம் அரசு கல்லுாரியில் பொது கலந்தாய்வு இன்று துவக்கம்
சேந்தமங்கலம் அரசு கல்லுாரியில் பொது கலந்தாய்வு இன்று துவக்கம்
சேந்தமங்கலம் அரசு கல்லுாரியில் பொது கலந்தாய்வு இன்று துவக்கம்
ADDED : ஜூன் 10, 2024 01:43 AM
ராசிபுரம்,: 'சேந்தமங்கலம் அரசு கல்லுாரியில், 2024-25ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை சிறப்பு ஒதுக்கீட்டுடன் தொடங்கியது' என, கல்லுாரி முதல்வர் பாரதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும், மே, 28 முதல் மாணவர் கலந்தாய்வு தொடங்கியது. இதில், மாற்றுத்திறனாளி மாணவர், 1, விளையாட்டு பிரிவில், 2 மாணவர்கள் என மொத்தம், 3 பேர் சேர்க்கை பெற்றனர். முதல்கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இன்று தொடங்கி, 15 வரையும், இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, 24ல் தொடங்கி, 29 வரை நடக்கிறது. இதுகுறித்து தகவலை, இக்கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் மின்னஞ்சல், வாட்ஸாப், மொபைல் எண் வழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இதேபோல், ராசிபுரம் ஆண்டகலுார் கேட், திருவள்ளுவர் அரசு கலைக்கல்லுாரியில், இன்று முதல் பொது கலந்தாய்வு தொடங்குகிறது.