Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/12ல் ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம்

12ல் ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம்

12ல் ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம்

12ல் ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம்

ADDED : ஜூன் 10, 2024 01:43 AM


Google News
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, சோமணம்பட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராஜகணபதி கோவிலில், வரும், 12ல் கும்பாபிஷேக விழா நடக்கிறது.

முன்னதாக, மே, 29 காலை, 10:00 மணிக்கு முகூர்த்தகால் நடப்பட்டது. 3 காலை, 6:30 மணிக்கு முளைப்பாரி போடப்பட்டது. நாளை காலை, 10:30 மணிக்கு தீர்த்தக்குடம் எடுத்துவர செல்லுதல், மாலை, 6:30 முதல் இரவு, 10:00 மணி வரை மகா கணபதி வழிபாடு, புண்யாகம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜைகள், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்சிகள் நடக்கிறது. 12 அதிகாலை, 4:30 மணிக்கு, இரண்டாம் கால பூஜை, கடம் புறப்பாடு, ஆலய பிரவேசம் நடக்கிறது. காலை, 6:00 மணிக்குமேல், 7:25 மணிக்குள் ராஜகணபதி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித தீர்த்தம் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us