/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/முகூர்த்த நாளில் பஸ் கிடைக்காததால் ஏணியில் தொங்கி சென்ற பயணிகள்முகூர்த்த நாளில் பஸ் கிடைக்காததால் ஏணியில் தொங்கி சென்ற பயணிகள்
முகூர்த்த நாளில் பஸ் கிடைக்காததால் ஏணியில் தொங்கி சென்ற பயணிகள்
முகூர்த்த நாளில் பஸ் கிடைக்காததால் ஏணியில் தொங்கி சென்ற பயணிகள்
முகூர்த்த நாளில் பஸ் கிடைக்காததால் ஏணியில் தொங்கி சென்ற பயணிகள்
ADDED : ஜூன் 10, 2024 01:42 AM
ராசிபுரம்: ராசிபுரம் பகுதியில் முகூர்த்த நாளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. இதனால், பஸ் கிடைக்காததால் பயணிகள் ஏணியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தனர்.
ராசிபுரம் பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சி, ஆத்துார், திருச்சி, ஈரோடு, கோவை, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஏராளமான பஸ்கள் செல்கின்றன. முகூர்த்தம், விடுமுறை, பண்டிகை தினங்களில் ராசிபுரம் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.
புதிய ஸ்டாண்டிற்கு முன் உள்ள சாலை வரை பயணிகள் வந்து விடுவர். இந்நிலையில், நேற்று முகூர்த்தம் என்பதாலும், இன்று பள்ளிகள் திறக்கும் நாள் என்பதாலும் சனிக்கிழமை மாலை முதல் ராசிபுரம் கடைவீதி, பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அலைமோதியது.
இரவு நேரம் கடைசி பஸ்களில் பயணிகள் நிற்க கூட முடியாமல் சென்றனர். கடைசி பஸ்சில் ஏற முடியாத பயணிகள் பஸ் ஸ்டாண்டிலேயே காத்திருக்கும் சூழலும் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு சேந்தமங்கலம் செல்லும் கடைசி பஸ்சில் பயணிகள் நிரம்பி வழிந்தனர். உள்ளே நிற்ககூட முடியாத அளவு கூட்டம் இருந்ததால், 4 வாலிபர்கள் பஸ்சின் பின்னால் உள்ள ஏணியில் ஏறிக்கொண்டனர். டிரைவர், கண்டக்டரும் இதை கவனிக்காததால், 4 பயணிகள் இரவில் தொங்கி கொண்டே சென்றனர். இதை பின்னால், டூவீலரில் சென்றவர்கள் வீடியே எடுத்து முகநுாலில் பரப்பி வருகின்றனர். இந்த வீடியே தற்போது வைரலாகி வருகிறது.