/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/சாலையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு சாலையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
சாலையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
சாலையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
சாலையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
ADDED : ஜூன் 24, 2024 07:10 AM
நாமக்கல் : நாமக்கல் யூனியன், வகுரம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மோகனுார் சாலை, திருச்சி சாலை, ஹவுசிங்போர்டு காலனி, பொன்விழா நகர், நேதாஜி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன.
அப்பகுதியில் சேகரிக்கும் குப்பையை மோகனுார் சாலை, அரசு கல்லுாரி அருகே கொட்டி தரம் பிரிக்கப்படுகிறது.தற்போது, திருச்சி சாலையை விரிவாக்கம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு, ஆங்காங்கே பணி நிறைவாகியுள்ளது. அந்த வகையில் பொன்விழா நகர் அருகே தார்ச்சாலையை ஒட்டி பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அந்த இடத்தில் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கும் குப்பையை மூட்டைக்கட்டி கொண்டுவந்து போட்டுச்செல்கின்றனர். அதனால் அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதோடு பகுதி வாசிகளுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, ஊராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட இடத்தில் குப்பை கொட்டும் நபர்களை கண்காணித்து அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.