/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/சாலையோர கேட்வால்வு தொட்டியால் அபாயம்சாலையோர கேட்வால்வு தொட்டியால் அபாயம்
சாலையோர கேட்வால்வு தொட்டியால் அபாயம்
சாலையோர கேட்வால்வு தொட்டியால் அபாயம்
சாலையோர கேட்வால்வு தொட்டியால் அபாயம்
ADDED : ஜூன் 24, 2024 07:07 AM
எலச்சிபாளையம் : எலச்சிபாளையம், வேலகவுண்டம்பட்டியில் இருந்து திருச்செங்கோடு செல்லும் நெடுஞ்சாலையோரத்தில் சில மாதங்களுக்கு முன், தண்ணீர் குழாய் இணைப்பிற்காக பள்ளம் தோண்டி கேட்வால்வு அமைத்து தொட்டி கட்டப்பட்டது.
இந்த தொட்டியின் மேல்பகுதியை சிலாப்கற்கள் போட்டு மூடாமல் அப்படியே திறந்த நிலையில் விட்டுள்ளனர்.இதன் அருகே நெடுஞ்சாலை உள்ளதால், வாகன ஓட்டிகள் சாலையோரத்தில் செல்லும்போது எதிர்பாராத விதமாக, தொட்டிக்குள் விழுந்து விபத்து நேர வாய்ப்புள்ளது. அதனால், சம்பந்தபட்ட அதிகாரிகள் கேட்வால்வு தொட்டியின் மேல்பகுதியில் சிலாப்கற்களை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.