ADDED : ஜூன் 24, 2024 03:15 AM
வெண்ணந்துார்;வெண்ணந்துார் நகர காங்., கமிட்டி கூட்டம், தலைவர் சிங்காரம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், வெண்ணந்துார் பகுதியில் இருந்து நாடார் தெரு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து, குண்டும், குழியுமாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு, இந்த சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெண்ணந்துாரில் புதிதாக மின் மயானம் அமைக்கப்பட்டு பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது.
இதனால், வெண்ணந்துார் பகுதியில் துக்க நிகழ்ச்சி நடந்தால், ராசிபுரம் மற்றும் மல்லசமுத்திரம் போன்ற ஊர்களுக்கு, 15 கிலோ மீட்டர் துாரம் சென்று அடக்கம் செய்யும் நிலை உள்ளது. அதனால், மின் மயானத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நகர செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.